
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது பிரதமர் மோடி பேசுகிறார். அவர் பேசும்போது பாஜக அரசு வெறும் வெற்று முழக்கங்களை மட்டும் கொடுக்காமல் திட்டங்களை கொடுத்துள்ளது. அதனால்தான் மக்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். மக்கள் வாய்ப்பு கொடுத்ததால் 14வது முறையாக குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து நான் பேசுகிறேன். கடந்த 10 வருடங்களில் 4 கோடிக்கும் அதிகமான ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் 12 கோடிகளுக்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. அதோடு வீடுகளுக்கு 12 கோடிக்கும் அதிகமான குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 50 வருடங்களாக வறுமையில் இருந்து மீட்க வேண்டும் என்ற குரலை மட்டுமே நாம் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் கடந்த 10 வருடங்களில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து இதை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். மேலும் கடந்த காலங்களில் ஊழல் என்று தலைப்பு செய்திகள் வந்த நிலையில் கடந்த 10 வருடங்களாக பல லட்ச ரூபாய் ஊழல் செய்யப்பட்டுள்ளது என்ற தலைப்பு செய்திகளே வரவில்லை. கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தாலும் எத்தனால் கலப்பதன் மூலம் பெட்ரோல் டீசல் இறக்குமதி மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை சேமித்தோம். நாங்கள் சேமிக்கும் பணத்தை கண்ணாடி மாளிகைகள் கட்ட பயன்படுத்தாமல் நாட்டை கட்டமைக்க பயன்படுத்துகிறோம் என்று கூறினார்.