ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரபலமானது. ஆனால் லட்டு தயாரிக்கப்படும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றி இறைச்சி போன்றவைகள் கலக்கப்பட்டதாக சமீபத்தில் அறிக்கை வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில் தேவஸ்தானம் தவறை ஒப்புக்கொண்டது. இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரச்சனைகளை சரி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேவஸ்தானமும் ஆந்திர மாநில அரசும் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு லட்டு மூலம் ஒரு நாளைக்கு கிடைக்கும் வருமானம் குறித்து தற்போது பார்ப்போம். அதாவது ஒவ்வொரு நாளும் சுமார் 3 லட்சம் லட்டுகளை கோவிலில் தயார் செய்கிறார்கள். மேலும் இதன் மூலமாக ஒரு நாளைக்கு 500 கோடி ரூபாய் வரை வருமானமும் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 500 கோடி ரூபாய் என்றால் வருடத்திற்கு பல கோடி ரூபாய் அளவிற்கு லட்டு விற்பனை மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருமானம் வரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.