
நாடு முழுவதும் 2000 ரூபாய் திரும்ப பெறப்படுவதாக நேற்று மத்திய அரசாங்கம் அறிவித்தது. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது குறித்து ஒரு டுவிட்டர் பதிவை தற்போது போட்டுள்ளார். அதில் 500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள். கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம் என்று பதிவிட்டுள்ளார்.
500 சந்தேகங்கள்
1000 மர்மங்கள்
2000 பிழைகள்!
கர்நாடகப் படுதோல்வியை
மறைக்க
ஒற்றைத் தந்திரம்!#2000Note #Demonetisation— M.K.Stalin (@mkstalin) May 20, 2023