பீகார் மாநிலம் கோபால்பஞ்சு மாவட்டத்தை சேர்ந்த ஹிமான்சூ என்ற இளைஞர் சூட்கேஸ் ஒன்றுடன் பிரயாக்ராஜுக்கு ரயிலில் பயணித்துள்ளார். அப்போது அவரை சந்தேகப்பட்ட போலீசார் அவர் வைத்திருந்த சூட்கேஸை திறந்து பார்த்துள்ளனர். அதில் ஒரு பெண்ணின் சடலம் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ஹிமான்சூவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தனது தாயிடம் 5000 ரூபாய் கேட்டபோது அவர் மறுத்து விட்டதாகவும் அதனால் அவரை கொலை செய்து சடலத்தை அப்புறப்படுத்த சூட்கேஸில் எடுத்து வந்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.