
தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மே 21ஆம் தேதி வரை 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதி, கேரளா மற்றும் கர்நாடகா கடலோர பகுதி, இலங்கை கடலோரப் பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.