தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 55 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விவகாரத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த கன்னுக்குட்டி, விஜயா, தாமோதரன் ஆகிய 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்த சின்னத்துரை, ஜோசப் ராஜா, ராமர் ஆகிய 3 மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சின்னதுரை, ஜோசப் மற்றும் ராமர் ஆகிய 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.