
இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் படத்தை இயக்குனர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். அறிமுக இயக்குனரான அபிஷான் ஜீவன்ந்த் இயக்கிய டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் நாசரேத் பலியான், மகேஷ் ராஜ் பசலியான் மற்றும் யுவராஜ் கணேசன் மகேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தின் பிரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று நடைபெற்றது.
அதில் இயக்குனர் அபிஷான் திரைப்படத்தைப் பற்றி கூறியதாவது, இந்த படம் ஒரு குடும்ப திரைப்படமாக இருக்கும் எனவும் எல்லோரும் சந்தோஷமாக குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம் எனவும் கூறினார். மேலும் படத்தில் நடித்த அனைவருக்கும் மற்றும் அவரது அம்மா அப்பா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இறுதியாக அவர் தனது தோழி அகிலா பற்றி கூறியதாவது, “உன்னைய எனக்கு 6 -த் படிக்கும் போதிருந்தே தெரியும். 10-த் படிக்கும் போதிலிருந்து க்ளோஸா இருக்கோம். இந்த இடத்துல உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும்.
வர அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா. ஐ லவ் யூ சோ மச்” என ப்ரொபோஸ் செய்துள்ளார். இந்த நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.