நீங்கள் தென்னிந்தியாவில் உள்ள கோவில்களை சுற்றி பார்க்க விரும்பினால் இந்த சுற்றுலா தொகுப்பு உங்களுக்கானது தான். ஐ ஆர் சி டி சி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது சிறப்பு பயணத் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது ஐ ஆர் சி டி சி யின் இந்த தொகுப்பு ஆறு பகல் மற்றும் 7 இரவுகள் கொண்டதாகும்.

இந்த பயணம் வருகின்ற ஆகஸ்ட் 13ஆம் தேதி ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து தொடங்குகின்றது. இது ஆகஸ்ட் 18ஆம் தேதி மதுரை விமான நிலையத்தில் முடிவடையும். இந்த டூர் பேக்கேஜிங் கட்டணம் ஒரு பயணிக்கு 39 ஆயிரத்து 850 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இரண்டு நபர்களுக்கு, இந்த சுற்றுப்பயணத்தின் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.30,500 என தெரிவிக்கப்பட்டுள்ளது.