ராஜஸ்தான் மாநிலத்தில் ஆறு மணி நேரத்தில் 2143 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் கரண் மாவட்டத்தில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி இலவச சமூக நல்லிணக்க திருமணம் 2,143 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் நடைபெற்றது. அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்ற இந்த திருமணம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ஸ்ரீ மகாவீர் கோஷாலா கல்யாண் சன்ஸ்தான்என்று அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட இந்த திருமணத்தில் மணமக்களுக்கு கட்டில், மெத்தை, நகைகள் மற்றும் குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவை சீர்வரிசையாக வழங்கப்பட்டுள்ளது.