
பிரேல் நாட்டைச் சேர்ந்தவர் ஆர்தர் ஓ உர்சோ. இந்த நபர் 6 பேரை திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில்6 மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார். இதில் ஆர்தர் ஓ உர்சோ மொத்தம் 9 திருமணம் செய்து 4 பேரை விவாகரத்து செய்துள்ளார். தற்போது மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்து 6 மனைவிகளுடன் ஒரு வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஆர்தர் ஓ உர்சோ தனது மனைவிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வதை வீடியோவாக சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார். இதன் மூலம் ஆர்தர் ஓ உர்சோ மாதம் 33,000 யூரோக்கள் சம்பாதிக்கிறார். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 29 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது.