தேனி மாவட்டத்தில் உலகநாதன் (34) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 மற்றும் 10 வயது சிறுவர்களை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தாய் புகார் கொடுத்த நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து உலக நாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் உலகநாதன் மீதான குற்றசாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதி அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் இதைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உலகநாதன் கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.