பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ‌ தன்னுடைய x பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா 6 மாதக்காலம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அண்ணன் திருமாவளவன் அறிவித்துள்ளார். இந்த 6 மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா இல்லை திருமா அணி மாறுவாரா.? இந்த சஸ்பென்சை யார் உடைக்க போகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜயுடன் ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டார். அப்போது அவர் திமுக கட்சிக்கு எதிராக பேசினார்.

அவர் 2026 ஆம் ஆண்டு மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும் எனவும் கண்டிப்பாக தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்றும் கூறினார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாகத்தான் திருமாவளவன் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து ஆறு மாத காலம் இடைநீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.

மேலும் விஜய் நிகழ்ச்சியில் அவரை கலந்து கொள்ள சொன்னது நான்தான் என்று கூறிய திருமா ஆதவ் கருதுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை எனவும் அது அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் தமிழிசை சௌந்தர்ராஜன் 6 மாதத்தில் திருமாவளவன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவாரா என்ற விதத்தில் மறைமுகமாக எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.