சிவகங்கை மாவட்டம் வலையப்பட்டி பகுதியில் முருகன்-அழகு மீனா (34) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் வேதா ஸ்ரீ என்ற 6 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தைக்கு கடந்த 4 நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் அழுது கொண்டே இருந்தது. இதனால் குழந்தையை மருத்துவர்களிடம் கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் பலனில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலை தன் குழந்தையுடன் வீட்டின் அருகே உள்ள கண்மாய் பகுதிக்கு அழகுமீனா சென்றுள்ளார். பின்னர் குழந்தை மீதும் தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் அலரி துடித்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. அதன் பிறகு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அழகு மீனாவும் சிகிச்சை பலனின்று இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக திருபுவனம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.