
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர் கான். இவர் ரீனா மற்றும் கிரண் ராவ் ஆகிய இரு பெண்களை திருமணம் செய்துவிட்டு பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். இந்நிலையில் நடிகர் அமீர்கானுக்கு தற்போது 60 வயது ஆகும் நிலையில் சமீபத்தில் தன்னுடைய காதலியை அறிமுகம் செய்தார். அதாவது கௌரிஸ் ஸ்பிராட் என்ற பெண்ணை தான் காதலிப்பதாகவும் கிட்டத்தட்ட 18 மாதங்களாக அவருடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் நடிகர் அமீர்கான் அறிவித்தார்.
இவருடைய காதலிக்கு 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது. விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அமீர்கானின் மூத்த மனைவியின் மகள் ஐரா கான் பொதுவெளியில் நடிகர் அமீர்கான் முன்பு நின்று அழுத வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஐரா கானுக்கு கடந்த வருடம் கோலாகலமாக திருமணம் நடைபெற்ற நிலையில் திடீரென தன் தந்தையை சோகமான முகத்துடன் அழுது படியே சந்தித்து சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்கள் அமீர்கானின் மூன்றாம் திருமணத்தையும் ஐரா கான் அழுததையும் இணைத்து என்ன காரணம் என பேசி வருகிறார்கள்.
View this post on Instagram