
நடிகர் விஜய் ஊழலுக்கு எதிராக தான் கட்சி ஆரம்பிக்கின்றேன் என்று சொன்னார் என்ற கேள்விக்கு பதில் அளித்த பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,
கமலஹாசன் என்ன சொன்னார். எல்லாருக்கும் குட் இன்டென்ஷன். நான் அவரை தப்பெல்லாம் சொல்லவில்லை. விமர்சிக்கவே விரும்பவில்லை. இன்றைக்கு வந்திருக்கிறார், வாழ்த்துறேன். ஆனால் எல்லோரும் சொல்றாங்க… அதுக்கப்புறம் என்ன செய்யறாங்க என்பது பார்க்க வேண்டியது இருக்கு. அதனால அவர் ஒரு நிலைப்பாடு, ஒரு பிரச்சனை வரட்டும்.
என்னோட கணிப்பு வருகிற 60 நாள் 80 நாளுக்குள்ள ஒரு அரை டஜன் மந்திரியாவது ஜெயிலுக்கு போவார்கள். அதனால் அப்ப அவர் என்ன கருத்து சொல்றார்ன்னு அப்பதான் நாம சொல்லணும், இப்ப எதுவும் சொல்லக்கூடாது…
பாஜக ஊழலுக்கு எதிரான கட்சி என்பது எல்லாருக்குமே தெரியுது. விஜய்யும் அதே மைண்ட் செட்ல இருக்காரு. வருகின்ற தேர்தலில் அவர் உங்களுக்கு ஆதரவு தருகின்ற வாய்ப்பு இருக்கின்றதா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,
இன்னைக்கு அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்றால், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதுவும் சொல்லி இருக்கிறார். நான் என்ன சொல்லுறேன்… ஆதரவு என்றாலே எப்போதும் நேர்முகமாக இருப்பது தான் நல்லது.
பாலிடிக்ஸ்ல இன்னார் ஓட்டு போடணும். எப்படி மறைமுகமாக சொல்வீங்க, முடியாது. நானும் 33 வருஷமா அரசியல்ல இருக்கேன். மறைமுகமர இருக்க முடியாது. விஜய் இந்த நிலையை எடுத்திருக்கிறார். அரசியலுக்கு புதுசா வந்திருக்கார், வாழ்த்துகிறேன் என பேசினார்.