அமெரிக்காவின் பிரதமர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அரசு ரகசியமாக வைத்திருந்த தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி. இவரை 1963 ஆம் ஆண்டு லீவ் ஹார்வே ஆஸ்வால்ட் என்ற நபர் சுட்டு கொலை செய்தார். இந்த கொலைக்கான காரணங்கள் மற்றும் பின்னணியில் உள்ள மறைக்கப்பட்ட தகவல்களை அமெரிக்க அரசு ரகசியமாக வைத்திருந்த நிலையில் கென்னடி படுகொலை தொடர்பான 80,000 பக்க குற்றப்பத்திரிக்கையை தற்போது டிரம்ப் அரசு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு முழுவதுமாக வெளியிட அமெரிக்க அரசு தடை விதித்திருந்த நிலையில் தற்போது இதை முழுவதுமாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் கென்னடியின் படுகொலைக்குப் பிறகு நடந்த உலக நடவடிக்கைகள் மற்றும் அரசியல் முன்னணி ஆராய்ச்சியாளர்களின் சந்திப்பு போன்ற விவரங்கள் இதன் மூலம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு கென்னடியை படுகொலை செய்ததற்கான காரணம் மற்றும்  அதில் நீடிக்கும் மர்மங்கள் குறித்த கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிட்டதட்ட 61 வருடங்களாக அவருடைய மரணத்தில் மர்மம் நீடித்து வந்த நிலையில் தற்போது வெளியான 80 ஆயிரம் பக்க ஆவணங்களின் மூலம் அவருடைய கொலை வழக்கு உலக அளவில் தெரியவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் மூலம் சோவியத் யூனியன் அல்லது கியூபா போன்ற நாடுகளுடன் தொடர்புடைய புதிய தகவல்களை கண்டுபிடிக்க வழி வகுக்கும் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.