
உலகின் மிக அதிக எடை உள்ள மனிதர் காலித் பின் மொஹ்சென் ஷாரி. இவர் மொத்தம் 610 கிலோ எடை இருந்தார். ஆனால் உடல் எடையை 542 கிலோ வரை குறைத்துள்ளார். தற்போது இவர் 62 கிலோ இருக்கிறார். இவர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர். இந்நிலையில் சவுதி அரேபியாவின் முன்னாள் மன்னர் அப்துல்லா உதவி செய்ததால் உடல் எடையை குறைப்பதற்கான ஆப்ரேஷன் ஷாரிக்கு செய்யப்பட்டது.
பின்னர் உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி போன்றவைகளின் மூலம் அடுத்த 6 மாதங்களில் தன் எடையை குறைத்தார். அவருக்கு மருத்துவர்கள் வழங்கிய தீவிர சிகிச்சை மற்றும் பிசியோதெரபி போன்றவைகள் உடல் எடையை குறைக்க உதவியுள்ளது. மேலும் அதிக எடை காரணமாக படுத்த படுக்கையாக கிடந்த ஷாரி தற்போது எடையை குறைத்ததால் சகஜமாக நடமாடி வருகிறார். இது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.