
கிராம நிர்வாக அலுவலர், வன காவலர், பில் கலெக்டர் மற்றும் ஆவின் ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்து தேர்வு ஜூன் 9 நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 6224 காலி பணியிடங்களுக்கு சுமார் 20 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். நாளை நடைபெறும் குரூப் 4 தேர்வின் முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி 2025 ஜனவரியில் வெளியாகும்.
நாளை 9:00 மணிக்கு பிறகு தேர்வு அறைக்கு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் 8:30 மணிக்கு தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே 12.45 மணிக்கு முன்பாக யாரும் தேர்வு அறையிலிருந்து வெளியேற அனுமதி கிடையாது. மேலும் ஹால் டிக்கெட், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் லைசன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.