தமிழக முதல்வர் ஸ்டாலின் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக திராவிட மாடல் ஆட்சி தான் அமையும் என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி அடுத்து வரும் தேர்தலில் அதிமுக வெர்ஷன் தான் என்று எக்ஸில் பதிவிட்டு இருந்தார். அதன் பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சியில் போதைப் பழக்கம் என்பது அதிகரித்துவிட்டதாகவும் அந்த கட்சியினரே அதனை செய்து வருவதாகவும் முதல்வர் பொம்மை போல வேடிக்கை பார்ப்பதாகவும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இதற்கு தற்போது திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, கரப்ஷன் ஆட்சியை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி அடுத்த வெர்ஷன் பற்றி எல்லாம் பேசலாமா. பாஜக கூட்டணியில் சேர்ந்த போது அதிமுகவின் வெர்ஷன் முடிவடைந்துவிட்டது. கூட்டணி ஆட்சி என்று சொன்னபோது எடப்பாடி பழனிச்சாமியின் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது. தமிழ்நாட்டை ஆதிக்கம் செய்ய நினைக்கும் பாஜகவிற்கும் அதன் அடிமை அதிமுகவிற்கும் தமிழ்நாட்டு மக்கள் 2026 ஆம் ஆண்டு get out சொல்வது உறுதி. இப்போது அதிமுக எம்எல்ஏக்கள் 66 பேர் இருக்கும் நிலையில் அடுத்து வரும் 2026 இல் 6 பேர் கூட இருக்க மாட்டார்கள் என்று கூறினார்.