தெலுங்கானா மாநிலம் சித்திபேட் பகுதியை சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தனியாக வீட்டில் இருந்துள்ளார். அந்த சமயம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த 19 வயது இளைஞன் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார்.

உதவிக்கு சிறுமி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமியை காப்பாற்றினர். இதனால் அங்கிருந்து தப்பிச்சென்ற அந்த 19 வயது இளைஞர் குடும்பத்தினருடன் அந்த ஊரை விட்டு வெளியேறி விட்டார்.

சம்பவம் குறித்து தெரிந்து கொண்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் இளைஞரின் வீட்டை கண்டுபிடித்து வீட்டிற்கு தீ வைத்துக் கொளுத்தினர். மேலும் வீட்டிற்கு வெளியில் நின்ற காரையும் சேத படுத்தினர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.