
பிக் பாஸ் மற்றும் டாடா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமான கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் தற்போது வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் கணிசமான வரவேற்பை மக்களிடையே பெற்று வருகிறது. இந்நிலையில் பட ப்ரோமோஷன்களுக்காக அவர் பல நேர்காணல்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அவர் ஏற்கனவே பங்கேற்ற நேர்காணல்களில் அவர் பேசிய சில முக்கிய நிகழ்வுகளை அவரது ரசிகர்கள் எடிட் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், என்னுடைய முதல் காதல் ஏழரை வருடம். அப்போது என்னுடன் இருந்த சக நண்பர்களும் காதலித்து வந்தனர். அவர்களுடைய ஜோடியை பார்க்கும்போது இதெல்லாம் பாதி ஆண்டை தாண்டாது என நான் என் மனதிற்குள் நினைத்ததுண்டு. ஆனால் சில வருடங்கள் கழித்து எந்த பெண்ணுடன் என் நண்பனை பார்த்தேனோ அவன் அதே பெண்ணுடன் இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்தான். அதை கண்டதும் இவர்களை தப்பாக நினைத்து விட்டோமே என வருந்தியதாகவும், அவர்களை சந்தித்த பின் ஊருக்குச் சென்றதும் நான் நினைத்த வாழ்க்கையை வேறொருவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என நினைத்து வருந்தினேன் என தெரிவித்துள்ளார்.
View this post on Instagram