
சுங்கச்சாவடி கட்டண உயர்வு: மஜக கண்டனம்
தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் நுழைவு கட்டணத்தை 7 சதவீதம் உயர்த்தும் முடிவுக்கு மஜக கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மஜக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்த கட்டண உயர்வு, அரசே நடத்தும் ஒரு வகை வழிப்பறியாகும். பொதுமக்களின் வாழ்க்கை சிரமத்தை மேலும் அதிகரிக்கும் இந்த முடிவை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
“நாட்டின் பொருளாதாரம் மந்தமாக உள்ள இந்த சூழலில், பொதுமக்களின் மீது இதுபோன்ற கூடுதல் சுமைகளை சுமத்துவது நியாயமல்ல. ஒன்றிய அரசு, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என மஜக கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.