
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியை போலவே ஜீ தமிழில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியை நடைபெற்று வருகிறது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வரும் நிலையில், கடந்த வாரத்தில் சண்டையை ஆரம்பிப்பது யார்? கணவன் மற்றும் மனைவி என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று உள்ளது.
அதில் பெண் ஒருவர் நான்கு வருடமாக ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்த அவர் காதலனை புறக்கணித்துள்ளார். மரியாதை இல்லாமல் நடந்து கொண்டதும் மிகவும் மோசமாகவும் பேசியுள்ளார். தன்னுடைய தாய் தந்தை கூட வேண்டாம், தனது கஷ்டத்தில் வந்து நின்ற இவன் ஏழு ஜென்மத்திற்கும் குழந்தையாக வேண்டும் என்று கேட்டு இறுதியில் காதலன் காலில் வந்து விழுந்து மன்னிப்பு கேட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சோகமா இருக்கப்ப இத பாத்து கடைசியா ஸாரி கேக்கறப்ப எனக்கு தெரியாம கண்ணுல தாரை தாரையா கண்ணீர்… அவ்வளவு வீக் ஆயிட்டனா 🥹🥹♥️♥️ pic.twitter.com/tcMkehC4QL
— Mr.Software (@_mike_ross_) April 1, 2024