
மலையாளத் திரையுலகில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் MT வாசுதேவன் நாயர். இவர் நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். இவருக்கு 91 வயது ஆகும் நிலையில் சமீபத்தில் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு இருதய பிரச்சனை மற்றும் மூச்சு திணறல் போன்றவைகள் இருப்பதாக தெரியவந்தது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
இவர் ஏராளமான புத்தகங்கள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ள நிலையில், சில மலையாள படங்களுக்கு திரைக்கதைகள் எழுதியுள்ள நிலையில் படங்களை இயக்கவும் செய்துள்ளார். மேலும் இவருக்கு ஞானபீட விருது மற்றும் 7 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. இவர் கடந்த 2005ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதினையும் வென்றுள்ளார். இவருடைய மறைவுக்கு தற்போது திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்.