
செக் குடியரசு நாட்டில் 7-வது பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச சதுரங்க போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி மொத்தம் 9 சுற்றுகளை கொண்டது. இதில் இந்தியாவை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் மற்றும் பிரக்ஞானந்தா உள்பட 10 வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த சர்வதேச சதுரங்க போட்டியின் இறுதி சுற்று நேற்று நடைபெற்றது.
இதில் தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம், துருக்கியை சேர்ந்த எடிஸ் குரேலுடன் மோதிய நிலையில் அந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதை தொடர்ந்து தமிழக நட்சத்திர வீரர் பிரக்ஞானந்தா இறுதி சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்தார். இதனால் அவர் ஐந்து புள்ளிகளுடன் 2 வது இடத்தை பெற்றார். மேலும் அரவிந்த் சிதம்பரம் 6 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் .