கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதி மாரியப்பன் இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் இணைந்து மாரியப்பனை தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் மாரியப்பணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கரூர் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் மாரியப்பனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.