
சென்னை மாவட்டம் அரும்பாக்கம் பகுதியில் சேர்ந்த அனுராதா. இவர் வடபழனியில் இருக்கும் பிரபல மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சிம்ரன் கடந்த 2018-ஆம் ஆண்டு காணாமல் போய்விட்டார் பல இடங்களில் தேடி பார்த்தும் சிம்ரன் கிடைக்கவில்லை. இதுகுறித்து அனுராதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிம்ரனை தேடி வந்தனர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. கடந்த 17-ஆம் தேதி கடலூரில் உள்ள பெண்கள் காப்பகத்தை சேர்ந்தவர்கள் போலீசாரை தொடர்பு கொண்டு நீங்கள் தேடிவரும் சிறுமி தற்போது 19 வயது இளம் பெண்ணாக இங்கே வளர்கிறார்.
அவரது தாயை அழைத்து வந்து அடையாளம் காண்பித்து அவரை அழைத்துச் செல்லலாம் என கூறியுள்ளனர். இதனால் போலீசாரும், அதிகாரிகளும், அனுராதாவுடன் காப்பகத்திற்கு சென்றனர். அங்கு தனது மகளை பார்த்ததும் அனுராதா கதறி அழுது கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
இந்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது. சிறுமியாக காணாமல் போன மகள் இளம்பெண்ணாக திரும்பி வந்துள்ளார். இதனால் அனுராதா மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார். அவர் போலீசாருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.