
மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஜூன் 30 மேலவளவு போராளிகளின் வீரவணக்க நாள். உள்ளாட்சி அமைப்புகளில் சமூக நீதியை நிலைநாட்டக் கூடிய வகையில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் நகர் பாலிகா சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. முதல் முதலாக நடைமுறைக்கு வந்த போது மேலவளவு ஊராட்சியும் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டது.
தனி தொகுதியாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடிய வகையில் சில சாதியவாத சக்திகள் அதை தனி தொகுதியாக அறிவிக்க கூடாது. மீண்டும் பொது தொகுதியாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அத்துடன் இல்லாமல் தலித் சமூகத்திலிருந்து யாரும் அதற்கு வேட்ப்புமனுத்தாக்கள் தாக்கல் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார்கள்.
மீறி வேட்புமனுக்கள் தாக்கல் செய்தால் அவர்களை படுகொலை செய்வோம் என்றும் வெளிப்படையாக அறிவித்தார்கள். ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவர் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தலித் சமூகத்தினரை ஊக்கப்படுத்தி, வேட்புமனுவை தாக்கல் செய்ய வைத்தார், தேர்தலையும் நடத்தினார்.
அதன்படி மேலவளவையை சார்ந்த ஊராட்சிக்கு முருகேசன் ஊராட்சி மன்ற தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர் உள்ளிட்ட ஆறு பேரும் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து விட்டு ஊர் திரும்புகின்ற வேளையில் பேருந்தை வழிமறித்து 1997 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 30ஆம் நாள் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தார்கள்.
இந்த படுகொலையை கண்டித்து மேலூர் நகரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட சிலரையும் தாக்கி காயப்படுத்தினார்கள். அதிலே சௌந்தர்ராஜன் அதடித்தே கொள்ளப்பட்டார். இப்படி ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்காக…. அதிகாரிகள் அதை நடைமுறைப்படுத்திய நிலையில்…. அரசுக்கு எதிராக போராட வேண்டியவர்கள்…. அல்லது அதிகாரிகளுக்கு எதிராக போராட வேண்டியவர்கள்…. அப்பாவி தலித்துகளுக்கு எதிராக வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
சேரியை கொளுத்தினார்கள். தேர்தலின் போது வாக்குச்சாவடிகளை கைப்பற்றினார்கள். பலரை தாக்கினார்கள், இறுதியாக மேலவளவு முருகேசன் மற்றும் ஆறு பேர் என ஏழு பேரை படுகொலை செய்தார்கள். அந்த கொடூரம் அரங்கேறிய நாள். உள்ளாட்சி சமூக நீதி நாளாக… சமூக அரசியல்… சமத்துவ நாளாக….. விடுதலை சிறுத்தைகள் கட்சி கடைபிடிக்கிறது. அதன் அடிப்படையில் இன்றைக்கு மேலளவுக்கு செல்கிறோம். அங்கே எழுப்பப்பட்டு இருக்கின்ற விடுதலை தளம் எனும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கிறோம். உள்ளாட்சி அமைப்புகளில் இன்னும் தலித்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூட…. அவர்கள் அதிகாரத்தை முறையாக நடைமுறைப்படுத்த இயலவில்லை…
துணைத் தலைவர்களாக இருப்பவர்கள், தலித் சமூக ஊராட்சி மன்ற தலைவர்களை அவமதிக்கிறார்கள்… செயல்படாமல் தடுக்கிறார்கள்…. இந்த போக்குகளை களைந்தெறிய வேண்டும்…. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதைப் போல, வன்கொடுமை தடுப்பு சட்டத்தையும் முறையாக நடைப்படுத்த வேண்டும் என்று இந்த நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலே மாநில அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசு ஆகியவற்றிற்ற்கு வேண்டுகோள் விடுக்கின்றோம் என் தெரிவித்தார்.