தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷிவம்பேட்டை அருகே தல்லாபள்ளி தாண்டா பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் உறவினர் இல்லத் திருமண விழாவுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் உசிரிக்கபள்ளி பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலையில் தாறுமாறாக ஓடி மரத்தில் மோதி ஏரியில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சிவராம் (55), அவரது மனைவி துர்கம்மா (45), மாலோத் அனிதா, அவரது மகள்கள் பிந்து (14), ஸ்ரவாணி (12), குகுலோத் சாந்தி (45) உள்பட 7 பேர் உயிரிழந்தார். கார் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.