சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து தனியார் சொகுசு பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எரமநாயக்கன்பட்டி பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது. இதனையடுத்து சாலையின் மையப்பகுதியில் இருக்கும் தடுப்பில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி சேதமானது. மேலும் பேருந்தில் பயணம் செய்த பெரியசாமி, லாவண்யா, ராஜேஸ்வரி, கிருஷ்ணவேணி உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.