
ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காவாலா பாடல் வெளியாகி இணையத்தைக் கலக்கி வரும் நிலையில், படத்தின் நாயகி தமன்னா, அப்பாடலுக்கு அசத்தல் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். காவாலா பாடலின் லிரிக்கல் வீடியோவில் தமன்னாவின் துள்ளல் நடனத்தையும், நடிகர் ரஜினிகாந்தின் ஸ்டலையும் ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். அருண்ராஜா காமராஜ் எழுதிய இந்தப் பாடலுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த பாடலுக்கு ஏராளமானவர்கள் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.
அந்தவகையில் தற்போது பாட்டி ஒருவர் இந்த காவலா பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். அந்த பாட்டிற்கு சரியாக ஒரு 70 வயதிற்கு மேல் இருக்கும். இந்த காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
@tamannaahspeaks ❤️🔥Hope u love this🙈💯 #kaavaalaa @anirudhofficial @sunpictures @Nelsondilpkumar @rajinikanth pic.twitter.com/ASe0YIK93K
— Akshay_partha (@akshay_partha) July 17, 2023