
சமூக வலைதளத்தில் வைரலாகும் ஒரு வீடியோ தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு காரில் 8 மாத கை குழந்தையுடன் ஒரு தாய் இருக்கிறார். அப்போது மற்றொரு காரில் இருந்து இறங்கி ஒரு பெண் வேகமாக ஓடி வர அவருடன் சேர்ந்து மற்றொரு பெண்ணும் ஓடி வருகிறார். அந்தப் பெண் திடீரென அந்த காரின் மீது ஏறி குதிக்க கண்ணாடிகள் நொறுங்குகிறது. தொடர்ந்து அந்த வாகனத்தை அந்த பெண்கள் தாக்கிய நிலையில் அந்த பெண்களின் கார் நம்பரை அந்த வாகனத்தில் இருந்த தாய் பதிவு செய்ய முயற்சி செய்தார்.
இதனால் கோபம் அடைந்த அந்த பெண்கள் மீண்டும் ஆக்ரோஷமாக தாக்குகிறார்கள். இதனை பாதிக்கப்பட்ட தாய் வீடியோ எடுத்த நிலையில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் பிறகு இந்த சம்பவம் நியூசிலாந்தில் நடந்தது என்பதால் வழக்கு விசாரணைக்கு ஒரு வருடம் ஆனது என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் நடந்து ஒரு வருடங்கள் ஆகி இருந்தாலும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகய சாலை பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் பொதுவெளியில் நடக்கும் வன்முறைகளை தடுப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
This is my video, the lady (she was over 30) pled guilty to wilful damage and has to pay a fine. We are in New Zealand so it has taken a year to get the case heard.
— Chantelle (@ChantelleBakerr) March 23, 2025