உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசிபூர் நகர அருகே நாகேந்திரா பிந்து தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிவாங்கி(8) என்ற மகளும், ஆயுஷ்(3) என்ற மகனும் இருந்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் பிந்துவை அவரது சகோதரர் பப்லு ராஷ்ரா பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். இந்த நிலையில் மாமியார் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற பிந்து அங்கு செல்லாமல் லாலா ராஜ்பர் என்ற தனது கள்ளக்காதலனை பார்ப்பதற்காக சென்றார்.

இதனையடுத்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக தனது மகள் சிவாங்கியை பிந்து கொலை செய்து உடலை புதைத்து விட்டார். அதன் பிறகு மகளை காணவில்லை என நாடகம் ஆடினார். இந்த விவகாரம் குறித்து பப்லு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலனுடன் இணைந்து பிந்து தனது மகளை கொலை செய்தது உறுதியானது. இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பிந்துவுக்கும் அவரது கள்ள காதலனுக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.