சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு மாம்பலத்தில் விக்னேஸ்வர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜிம் மாஸ்டர். 12ஆம் வகுப்பு படித்த போது விக்னேஸ்வர் ஆட்டோ ஓட்டுனரின் மகளான 15 வயதுடைய மாணவியை காதலித்துள்ளார். இருவரும் பள்ளி படிப்பு முடிந்த பிறகு ஒரே கல்லூரியில் சேர்ந்தனர். விக்னேஸ்வர் அடிக்கடி தனது காதலியை மகாபலிபுரத்திற்கு லாங் டிரைவ் அழைத்துச் சென்று அத்துமீறி உள்ளார். இதுகுறித்து அறிந்த கல்லூரி நிர்வாகம் இருவரையும் 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்தது. கல்லூரி படிப்பை முடித்த பிறகு விக்னேஸ்வர் சொந்தமாக ஜிம் தொடங்கினார்.

அவரது காதலியும் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இந்த நிலையில் இளம்பெண் தனது தந்தையுடன் விக்னேஸ்வர் வீட்டிற்கு சென்று திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார். அப்போது விக்னேஸ்வரும், அவரது பெற்றோரும் வரதட்சணையாக சொகுசு கார் மற்றும் 80 சவரன் தங்க நகை தருமாறு கேட்டனர். எதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண்ணின் தந்தை அவ்வளவு வரதட்சணை கொடுக்க முடியாது என கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி விக்னேஸ்வர் தனது காதலியை ஹோட்டலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை கொடுத்து அங்கு அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். அதை வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டார்.

பின்னர் அந்த வீடியோவை தனது காதலிக்கு அனுப்பி தன்னை மறந்து விடுமாறு எச்சரித்துள்ளார். கடந்த மே மாதம் 13-ஆம் தேதி தனது காதலியின் குடும்பத்தினர் தன்னை கடத்தி கட்டாய திருமணம் செய்து வைக்க வற்புறுத்துவதாக விக்கி போலீசில் புகார் அளித்தார். மேலும் மே மாதம் 8-ஆம்  தேதி  எனக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்து விட்டது. ஆட்டோ ஓட்டுனரின் மகள் என் வாழ்வில் தலையிடக்கூடாது என புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில்  தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த காதலி விக்னேஸ்வர் மீது பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரியின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த விக்னேஸ்வரை அதிரடியாக கைது செய்தனர்.