பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கடற்கரையில் விமான கண்காட்சி நடைபெற்றது. நேற்று மாலை 5 மணி அளவில் நடந்த விமான கண்காட்சியின் போது ஒரு ஏரோபாட்டிக் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தை ஓட்டிய 65 வயது விமானி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நடுவானில் விமான சாகசம் நடந்து கொண்டிருக்கும் போது விமானம் ஒரு வளைவில் இறங்கிய நேரத்தில் எதிர்பாராத விதமாக கடலில் விழுந்து கோர விபத்து ஏற்பட்டது. அதன்பின் நடந்த மீட்பு பணியில் 65 வயது மதிக்கத்தக்க விமானியின் சடலம் கடலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது மேலும் இந்த விமானம் ப்ரோவென்ஸ் லேண்டிங்ஸின் 80 வது ஆண்டு விழாவில் நிகழ்த்தப்பட இருந்த பிரெஞ்சு விமானப்படையின் துல்லியமான ஏரோபாட்டிக்ஸ் பிரிவான patrouille de France வார்ம் ஆப் என்ற செயல்பாட்டில் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.