
பென்ஷன் வாங்குபவர்களுக்கு மத்திய அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. 80 வயதை கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்தை அரசு அறிவித்துள்ளது. இதனால் பணவீக்கத்தை சமாளிக்கவும், மருத்துவ செலவுகள் மற்றும் வீட்டு வசதி போன்ற பிற தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் முடியும் என தெரிவித்துள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்கள் 80 வயதை அடையும்போது கூடுதல் ஓய்வூதியத்தை பெறுவார்கள். 80 வயதிற்கு பிறகு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கிடைக்கும் கூடுதல் நிதி உதவி தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்கள் 80 வயதிற்கு பிறகு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் 10 சதவீதம் அதிகரிக்கப்படுகின்றது.
ஓய்வூதியம் பெறுபவர் 100 வயதை அடைந்தால் அவர் மொத்த ஓய்வூதிய தொகையில் 100% வரை கூடுதல் ஓய்வூதியத்தை பெறுவார்கள். ஓய்வூதியம் பெறுவோர் 80 வயதை எட்டிய மாதத்தின் முதல் நாளிலிருந்து கூடுதல் ஓய்வூதியத்தை பெறுவார்கள். கூடுதல் ஓய்வூதியம் தொடர்பான புதிய அறிவிப்பு விரைவில் ஓய்வூதியதாரர்களுக்கு வர உள்ளது. எந்த வயதில் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே நிலுவையில் உள்ளது.
தற்போது இந்தியாவில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. 65 வயது முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுதல் ஓய்வூதிய தொகையை 5% உயர்த்த வேண்டும் என நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரை அமல்படுத்தப்பட்டால் ஓய்வூதியதாரர்கள் ஓய்வு பெற்ற சில வருடங்களிலேயே பென்ஷன் உயர்வு பெற தொடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ஓய்வூதியத்தாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.