ஐரோப்பாவை சேர்ந்தவர் ஆர்னே பை. முன்னாள் கிராம மருத்துவரான ஆர்னேவுக்கு 55 வயது ஆகிறது. இவர் மருத்துவப் பயிற்சி சமயத்தில் பல பாலியல் சம்பவங்களில் ஈடுபட்டதாக தெரிகிறது. மொத்தம் 94 பெண்களின் வாழ்க்கையை இவர் சீரலித்துள்ளார். அதில் 87 பெண்களை ஆர்னே பலாத்காரம் செய்துள்ளார். பெரும்பாலும் அவரிடம் சிகிச்சைக்காக சென்ற 14 வயது முதல் 67 வயது வரை உள்ளவர்களை ஆர்னே தனது ஆசைக்காக வக்கரத்தில் வீழ்த்தியுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவரது குற்ற செயல்கள் வெளியே தெரிந்தது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆர்னே மீது புகார் அளித்தனர். ஆர்னேவிடம் இருந்து 6000 மணி நேர அந்தரங்க வீடியோ பறிமுதல் செய்யப்பட்டது. அவர் அனுமதி இல்லாமல் சிகிச்சைக்கு வந்த பெண்களை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இவருக்கு 21 வருடங்கள் கடுங்காவல் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவிலேயே மிக மோசமான பாலியல் வழக்காக இது கருதப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.