மதுரையை சேர்ந்த சிவாஜியின் மகன் விக்கி என்ற விக்னேஷ். 24 வயதான இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் உள்ளார். மேலும் ஒன்பது மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இ ந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதால் இவருடைய மனைவி சம்பவத்தன்று தன்னுடைய பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் நேற்று முன்தினம் இரவு அவருடைய மனைவி தங்கி இருந்த வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.

அப்போது விக்னேஷின் மனைவி இரண்டு வயது மகனை மட்டும் தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் மேலும் கோபம் அடைந்த விக்னேஷ் தொட்டியில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்பது மாத பெண் குழந்தையை நடு ரோட்டில் தூக்கி வீசி எரிந்ததால் பிஞ்சு குழந்தை படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.