திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் செல்போன் டவர் ஊழியராக வேலை பார்க்கிறார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கனகராஜுக்கு தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அழகு நிலைய உரிமையாளரான தனலட்சுமி நேற்று முன்தினம் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது கனகராஜ் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கனகராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் மன உளைச்சலில் கனகராஜ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.