கர்நாடக மாநிலம் கலபுரகி கிராமத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த பள்ளியில் கவுரவ ஆசிரியராக சிவராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு அந்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அடிக்கடி தனிமையில் சந்தித்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில் அங்கு சிவராஜ் சென்றுள்ளார்.

அப்போது அவர் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதேபோன்று அவர் பலமுறை மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த நிலையில் இது பற்றி வெளியே சொல்லக்கூடாது என்ற மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன மாணவி தன் பெற்றோரிடம் நடந்த விபரங்களை கூறிய நிலையில் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து சிவராஜை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.