ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு 9 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி பள்ளிக்கு சென்று விட்டு வழக்கம் போல் வீட்டிற்கு திரும்பிய நிலையில் பின்னர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தாய் வழியில் அண்ணன் உறவு முறை கொண்ட ஒரு 17 வயது சிறுவனும், ஒரு 14 வயது சிறுவனும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இவர்களோடு சேர்ந்து முனுசாமி மற்றும் சக்கரவர்த்தி ஆகிய வாலிபர்களும் பாலியல் தொல்லை கொடுத்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தன் பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் உடனடியாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனர்.