
தமிழகத்தில் 12 ஆண்டுகளில் 9 பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். ஒன்பது சம்பவங்களையும் நிகழ்த்தியது பாஜக, இந்து மக்கள் கட்சியைச் சார்ந்தவர்கள். கட்சியில் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை நிகழ்த்தினார்.
தமிழகத்தில் திமுக – அதிமுக உட்பட எந்த கட்சிகளும் பெட்ரோல்க் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது கிடையாது. ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். ஆளுநர் மாளிகை அருகே நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு கண்டனத்தை பதிவு செய்கின்றேன். தமிழகத்தில் வன்முறை சம்பவங்களை தூண்ட துடித்துக் கொண்டிருப்பவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும் என தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார் .