
WWW மல்யுத்த போட்டிகளில் மிகவும் பிரபலமான வீரர் ஜான் சீனா. இவர் 90ஸ் கிட்ஸ் களுக்கு மிகவும் பிடித்தமான வீரர். இவர் களத்திற்குள் வரும் ஸ்டைலே வேறு விதமாக இருக்கும். இவர் 16 முறை WWW போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இந்நிலையில் தற்போது ஜான் சீனா WWW போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதன்படி 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அவர் ஓய்வு பெற இருக்கிறார்.
இவர் கனடா நாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்போது ரசிகர்கள் ஓய்வு பெற வேண்டாம் என கூச்சலிட்டனர். இவருக்கு தற்போது 47 வயது ஆகிறது. இவர் மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்கும் போது ஆடையில்லாமல் மேடைக்கு சென்றார். அப்போது அது பெரும் பேசும் பொருளாக மாறியது. மேலும் ஜான் சீனா தற்போது திடீரென ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.