தாலிபான் அரசு காபூல் நகரம் முழுவதும் ஒரு புதிய கண்காணிப்பு முறையை கொண்டு வந்துள்ளது. அதாவது அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையை கவனிப்பதற்காகவும், அவர்களை பாதுகாப்பதற்காகவும் 90 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ளது. இதுகுறித்து காவலர்  கலீத் ஸட்ரான் கூறும்போது, நாங்கள் காபூல் நகரத்தை முழுவதும் கண்காணித்து வருகிறோம் என்றார்.

அதோடு குற்ற செயல்கள் எதுவும் நடக்காமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை என்று கூறினாலும் மக்கள் மீது கட்டுப்பாட்டை அதிகரிக்கவும், பெண்கள் மற்றும் சிறுமியருக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்தவும் இந்த கண்காணிப்பு முறை பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து சந்தேகமான கூட்டங்கள் உருவாகும்போது உடனடியாக போலீசாரை அனுப்பி விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு முறையானது குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காக மட்டுமல்லாமல் தாலிபான் ராணுவத்தினரையும் கண்காணிக்க பயன்படுகிறது. மேலும் இந்த கண்காணிப்பு முறையை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆம்னிஸ்டி இன்டர்நேஷனல் கடுமையாக கண்டித்து வருகின்றன. தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் மக்கள் கண்காணிக்கப்படுவது தாலிபானின் கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் என்று அவர்கள் கூறினர்.

அதுமட்டுமல்லாமல் பெண்கள் பொது இடங்களில் இயங்கும் உரிமையை இத்தகையை கண்காணிப்பு முறைகள் மேலும் கட்டுப்படுத்த கூடும். பாதுகாப்பு மற்றும் தனிமுரண் ஆகிய இரண்டும் சமநிலையில் இருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனால் அரசின் இந்த செயல் எதிர்ப்புகள் மற்றும் கருத்து சுதந்திரத்தை அடக்குவதற்காகவே பயன்படுத்தப்படும் என்பதில் அபாயம் அதிகம் என்பதில் சந்தேகமில்லை என்று கூறினர்.