
தமிழ் சினிமாவில் 90ஸ் களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ரம்பா. தமிழில் உழவன் என்ற படத்தின் மூலம் நடிகை ரம்பா அறிமுகமானார். இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி போன்ற பல மொழிகளில் வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் திரைவுலகை விட்டு விலகிய ரம்பா கலைஞர் தொலைக்காட்சியின் மாநாடு மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.
அதன்பின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ரம்பா தனது குடும்பத்தினரோடு நடிகர் விஜய்யை சென்று சந்தித்துள்ளார். பின்னர் நடிகர் விஜயுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் சமீபத்தில் வெளியிட்டார். இந்நிலையில் ஒரு பேட்டியின் போது நடிகை ரம்பாவிடம் மீண்டும் சினிமாவில் நடிப்பீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நான் மீண்டும் நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.