
திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்துவிட்ட நிலையில், அதிமுக கூட்டணி இன்னும் முழு வடிவம் பெறவில்லை. பாமகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்கும் வகையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமதாஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், பாமக 9+1 கேட்க, அதிமுகவோ, 7+1 ஒதுக்க முன்வந்துள்ளது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு, அதிமுக – பாமக இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிகிறது.