கர்நாடக மாநிலம் தேர்தல் பிரச்சாரத்தின் பரபரப்பான நாட்களில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டுமாக பேரணிகளில் உரையாற்றினார். அதோடு மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒரு மெகா ரோட்ஷோவை நடத்தினார். அதுமட்டுமின்றி அவர் பாஜகவுக்கு பெரும்பான்மை வலு கிடைக்கும் என வலுயுறுத்தினார்.

காங்கிரஸ் தலைவர் எம்.மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் மோடியை “விஷப் பாம்பு” என திட்டினார். இதுகுறித்து பேசிய மோடி, காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் இதுவரையிலும் 91 முறை பல்வேறு வகையான அவதூறுகளை தன் மீது வீசியுள்ளனர் என்று கூறினார்.