
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ. இவர் சினிமாவில் உயரத்தில் இருந்த காலகட்டத்தில் சுந்தர்சியை காதலித்த திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது . இந்த நிலையில் நடிகை குஷ்பூ தன்னுடைய கணவர் குழந்தைகள் குறித்து பல பேட்டிகளில் பேசியிருக்கிறார். ஆனால் முதல்முறையாக மாமியாரின் லீலைகள் குறித்து பேசி உள்ளார் . அதில் கல்யாணத்துக்கு பிறகு என்னுடைய மாமியாரை என்னோடு வைத்துக் கொண்டேன் .
எவ்வளவு சண்டை வந்தாலும் விட்டுக் கொடுத்து பேச மாட்டார் . என்னுடைய கணவர் தான் அவருடைய செல்லப்பிள்ளை . ஆகையால் அவர் அம்மாவை விட்டுக் கொடுக்க மாட்டார். என்னை பற்றி யாராவது தவறாக பேசினால், அவர்களைப் பார்த்து நீ யாரு என்னுடைய மருமகள் பற்றி பேச என்று கேட்பார். தற்போது 91 வயதாகிறது . ஆனால் பத்து மணி ஆனால் கண்டிப்பாக எனக்கு போன் செய்து கணவர் குழந்தைகள் பற்றி விசாரிப்பார் என்று பகிர்ந்துள்ளார்.