பாகிஸ்தானில் கேஸ் சிலிண்டர் அளவு போதுமானதாக இல்லாததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றார்கள்.

பாகிஸ்தானில் கேஸ் சிலிண்டர் உற்பத்தி போதிய அளவு இல்லாததால் சிலிண்டர் பற்றாக்குறை உள்ளது. இதனால் மக்கள் தங்களின் எல்பிஜி தேவையை பூர்த்தி செய்ய பிளாஸ்டிக் பலூன்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கைபர் பக்துன்வா மாகாணத்தில் மக்கள் இவ்வாறு பிளாஸ்டிக் பலூன்களில் சமையல் எரிவாயுவை நிரப்பி செல்லும் வீடியோ வைரலாகி வருகின்றது.

உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி கைபர் பக்துன்வா மாகாணத்தில் கடந்த 2007 முதல் மக்களுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்கப்படவில்லை. ஹங்க்கூ நகரில் இரண்டு ஆண்டுகளாக எரிவாயு இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் சமையல் எரிவாயுவை மக்கள் பிளாஸ்டிக் பலூன்களில் இருப்பு வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.