விஜய் டிவியில் பிக்பாஸ் 6 தொடங்கி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றது. முடிவடைய இருக்கும் பிக்பாஸில் ஏற்கனவே கதிரவன் மற்றும் அமுதவாணன் பணத்துடன் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்கள். இதனால் நான்கு போட்டியாளர்கள் இறுதி போட்டியாளராக இருக்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி 104 நாட்களை இன்று நெருங்கி இருக்கின்றது. இந்த நிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் சென்ற பிக் பாஸ் போட்டியாளரான கவின் உள்ளே வருகின்றார். அப்போது ஜாலியா வாங்க அப்புறம் ஜாலியா எல்லாத்தையும் பார்த்துக்கலாம் என போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறுகின்றார். அப்போது பேசிய பிக்பாஸ், கவின் உங்களுக்கும் பெட்டிக்கும் என்ன ராசின்னு தெரியவில்லை. நேற்று பெட்டி போச்சு, இன்னைக்கு நீங்க வந்து இருக்கீங்க என ஜாலியாக பேசுகின்றனர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.